முகப்பு /விழுப்புரம் /

இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு.. இளைஞர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன விழுப்புரம் ஆட்சியர்..

இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு.. இளைஞர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன விழுப்புரம் ஆட்சியர்..

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை

Indian Air Force : இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இளைஞர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு 'Y' மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் 8 வரையிலான வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளர் (12ம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும், 27/06/2002 முதல் 27/06/2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

மேலும், மருத்துவ உதவியாளர் 12ம் வகுப்பு (டிப்ளமோ/ பிஎஸ்சி மருத்துவம்) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 12th, Diploma/B.Sc (Pharmacy) படித்து முடித்த திருமணம் ஆகாதவர்கள் 27/06/1999 முதல் 27/06/2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27/06/1999 முதல் 27/06/2002 வரையான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பயிற்சியின்போது உதவி தொகையாக மாதம் ரூ.14,600/- வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், ராணுவ சேவை ஊதியம்(MSP) உட்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26,900/- ஆகும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உயரம் 152.5 செ.மீட்டர். இருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து, தேர்வுமுறை, தேர்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது

04146 226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Army jobs, Local News, Villupuram