Home /viluppuram /

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேரவேண்டுமா- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேரவேண்டுமா- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கணினி மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர் சேர்க்கை நடக்கிறது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கணினி மேலாண்மை, கூட்டுட்றவு மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் தொழில்நுட்பட்ங்கள் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    பயிற்சியில் இணைவது எப்படி?

    விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூ.100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் காலம் ஓராண்டாகும். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள்,
    பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.18,850.

    கடைசி தேதி அறிவிப்பு:

    பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கொரியர் அல்லது பதிவுத் தபால் மூலமாக மட்டுமே விழுப்புரம் கூட்டுட்றவு மேலாண்மை நிலையத்தில்
    சமா்ப்பிக்க வேண்டும்.

    விவரங்களுக்கு:

    விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 2/1006 எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு 04146-259467 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் யசோதாதேவி தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி