திருக்குறளை முற்றோதல் செய்தால் ரூ.10,000 பரிசுத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்தது, உன்னதமானது மனித குலம் அனைத்திற்குமான தன்னிகரற்ற படைப்பு திருக்குறள் நூல் ஆகும். உலகத்திற்கே பொதுவான கருத்துக்களை கூறும் நூல் என்பதால் அதற்கு உலகப் பொதுமறைஎன்ற மற்றொரு பெயரும் உண்டு.
இத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துக்கள் அடங்கிய திருக்குறட்பாக்கள் மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து நெஞ்சில் நிலைத்து அறநெறிகள் கொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவ செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும்.
அதனைக் கருத்தில் கொண்டு 2022-2023ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10000 வீதம் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உடைய மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து அதில் தகுதி பெற்றவர்களை தெரிவு செய்யது பரிசுப் பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவார்கள். திறனாய்வு குழு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்படுகிறது.
விதிமுறைகள் :
1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண் பெயர், அதிகாரம் பெயர், குறள் எண் பெயர் போன்றவற்றை கூறி குறளை கேட்டால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.
விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.
மேலும், கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் தொழிற்பயிற்சி, கல்வியியல், செவிலியர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் கல்லூரி மாணவர்களும் பங்கு பெறலாம்.
தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.
திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை(www.tamilvalarchithurai.com) என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிறைவு செய்த விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் அறை எண் 15-இல் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.
பின்னர் திறனறி குழு கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் அந்த மாணவனோ அல்லது மாணவியோ பரிசு பெற தகுதி உடையவர்களாக அரசுக்கு சிபாரிசு செய்யப்படுவார்கள். இவ்வாறு சிபாரிசு செய்யப்பாட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசு தரப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அலுவலகத் 9786966833 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram