ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு

கால்நடை சுகாதார விழிப்புணர்வு

Villuppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற இருப்பதாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனிச்சமேடு ஊராட்சி, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காந்தலவாடி ஊராட்சி ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமையும்) நடைபெறுகிறது.

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகல்பாக்கம் ஊராட்சி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செ.குன்னத்தூர் ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, ஆண்மை நீக்கம், தாது உப்புக்கலவை வழங்குதல், மலடுநீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளது.

Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

மேலும், கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டு கால்நடைகளை வளர்ப்பது, பராமரிப்பது குறித்து ஆலோசனை வழங்கவுள்ளனர். எனவே பொதுமக்கள், இம்முகாமை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Animals, Local News, Villupuram