யாசகம் பெற்ற பணத்தில் தன்னுடைய செலவு போக மீதி பணத்தை ஊர் மக்கள் மேன்மைக்காக செலவிடும் நல் உள்ளம் படைத்தவர் தான் பூல் பாண்டியன் .தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல் பாண்டியன் (73) 43 வருடமாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று தான் யாசகம் பெற்ற பணத்தில் மாவட்ட மேன்மைக்காக தன்னால் முடிந்த நிதி உதவி வழங்கி வருகிறார்.
இவர், ஊரடங்கு நேரத்தில் தெருத்தெருவாக அலைந்து மக்களிடம் யாசகம் பெற்று சேர்த்த பணத்தை, கொரோனா நிவாரணத்துக்கு கொடுத்துள்ளார். சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள 400 பள்ளிகளுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளதாகவும், மும்பையில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டதாகவும் பூல் பாண்டியன் கூறினார்.
மேலும் இது பற்றி காவி உடை அணிந்த பூல் பாண்டியன் கூறுகையில், “என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி ஆலங்கிணறு. எனக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டு மகள்கள் ஒரு மகன் . என்னுடைய பசங்க அனைவரும் அவருடைய லைப்புல செட்டில் ஆகி விட்டார்கள் . அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு முதல் தென் மாவட்டங்களில் உள்ள புண்ணியத் தலங்கள், சுற்றுலாத் தளங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன்.
கிடைக்கும் பணத்தில் என் தேவைக்குப் போக மற்றதை நல்ல காரியங்களுக்கு கொடுத்து வருகிறேன். எந்த மாவட்டத்தில் பிச்சை எடுக்கிறேனோ அங்கு எனக்கு கிடைக்கும் பணத்தில் அங்குள்ள பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் செலவு செய்கிறேன். இதுவரை சுமார் ரூ. 50.6 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாகவும் கூறி நம்மை ஆச்சரியம் அடைய வைத்தார்.
”மேலும் 38 மாவட்டங்களில் இன்னும் மூன்று மாவட்டங்கள் தான் மிச்சம் மற்ற அனைத்து மாவட்டங்களில் என்னால் முடிந்த பத்தாயிரம் ரூபாயோ அல்லது ஒரு லட்சமோ என்ன இருக்கிறதோ அதை நன்கொடை அளித்து வருகிறேன். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் பணம் அனுப்பியுள்ளேன்.
தற்போது விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், பத்தாயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்க வந்துள்ளேன். என்னுடைய ஒரே நோக்கம் என்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுவேன். அதேபோல் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்கள் செய்ய வேண்டும் என பூல் பாண்டியன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram, Viluppuram S22p13