ஹோம் /விழுப்புரம் /

சுகாதாரத்துறையின் வேலை என்ன? விழுப்புரம் கண்காட்சியில் விளக்கம்..!

சுகாதாரத்துறையின் வேலை என்ன? விழுப்புரம் கண்காட்சியில் விளக்கம்..!

X
An

An exhibition to explain the functioning of the health sector to the public

viluppuram exhibition | விழுப்புரம் ஆட்சியர் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  சார்பில்,காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு  மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம்  கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

சுகாதாரத்துறையின் செயல்பாட்டை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான கண்காட்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் பெருத்திட்ட வளாகத்தில் , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில்,காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், எடுக்கப்பட்டது. பெண்கள் தேவையான அயன் டேப்லெட், குழந்தைகள் எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், ஊட்டச்சத்துக்கு தேவையான மருந்துகள் பொருட்கள் எப்படி உட்கொள்ள வேண்டும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, 108 அவசர கால உதவியின் போது எவ்வாறு செயல்படுகிறது, என்பது போன்ற பல விஷயங்கள் இதில் பொதுமக்களுக்கு பகிரப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மக்களின் சுகாதார கோரிக்கைகளை நேரடியாக கண்டறிந்து,அக்கோரிக்கைகளுக்கு தகுந்த தீர்வுகளை காண்பதற்காக மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.

பொதுசுகாதாரம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாலும். பொதுசுகாதாரத்தின் சேவைகள் மிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் அனைத்து குடிமக்களும் தங்களுடைய உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட மற்றும் வட்டார அளவில் சுகாதார பேரவைக் கூட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமுதாயத்திற்குள் உள்ள சுகாதார தேவைகளை கண்டறிந்து சுகாதார பங்கீட்டாளர்களுடனும் சமுதாயத்திடமும் இதை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தி அந்தந்த வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார சிக்கல்களை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Villupuram