முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.. சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்..

விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.. சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்..

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்

Villupuram News : விழுப்புரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரித்திட அறிவுறுத்தப்பட்டது. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்எடுத்துக் கொண்டனர்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமத்துவ நாள் உறுதிமொழியான, சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைககளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் தபரமேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஹரிதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டேர் நலத்துறை அலுவலர் ரகுபதி, செய்தி மக்கள் தொடர்புத்துறை நாகராஜ பூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, Villupuram