முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

X
ஆலங்கட்டி

ஆலங்கட்டி மழை

Villupuram News | விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென  பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் தினமும் அவதி அடைந்தனர். இதையடுத்து செஞ்சி போன்ற பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. கொளுத்தும் வெயிலில் இருந்து, குளிர்ச்சியான காலநிலைக்கு மக்கள் திரும்பினர்.

இதனை அடுத்து விழுப்புரத்தில்  சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து மக்கள் உற்சாகமடைந்தனர்.

ஆலங்கட்டி மழை

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Villupuram