விழுப்புரம் டூ திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த கிராமமாக விளங்குகிறது ஆலம்பாடி கிராமம். இக்கிராமத்தில் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் கிராமம்.
இவர்கள் பருவத்திற்கு ஏற்றார்போல, கரும்பு, நிலக்கடலை, பச்சை மிளகாய், கீரை வகைகள், காய்கறிகள் ரகங்கள், பூ ரகங்கள் போன்றவை பயிரிடுகின்றனர். ஒவ்வொரு வருடமும், அந்தந்த கால நிலைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ற பயிர்களை பயிரிடுகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக வீட்டுப் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
முழு நாளையும் விவசாயத்திற்கு அர்ப்பணித்து வருகிறார்கள். ஒவ்வொரு பயிரையும் தன் குழந்தையைப் போல நினைத்து அதனை பார்த்து வளர்த்து அறுவடை செய்கிறார்கள். அறுவடை செய்யும் விளை பொருட்களை விழுப்புரம் திண்டிவனம் திருக்கோவிலூர் போன்றா பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மகசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றால் அதனை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து விடுகின்றனர்.
விவசாயம் தான் எங்களுக்கு வாழ்க்கை அளிக்கிறது நாங்கள் விவசாயத்தில் மேன்மேலும் புதிய புதிய முறைகளையும் பயிர்களையும் பயிரிடுவோம் என ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.