ஹோம் /விழுப்புரம் /

துணிவு, வாரிசு படங்கள் வெற்றி பெற விழுப்புரம் அஜித் ரசிகர் செய்த செயலை பாருங்க..

துணிவு, வாரிசு படங்கள் வெற்றி பெற விழுப்புரம் அஜித் ரசிகர் செய்த செயலை பாருங்க..

X
விழுப்புரம்

விழுப்புரம் அஜித் ரசிகர்

Villupuram Ajith Fan| தல - தளபதி இருவரின் திரைப்படங்களும் வெற்றி அடைய வேண்டும் என பிரஷ்ஷை பயன்படுத்தாமல் இரண்டு "முழங்கை மூட்டுகளை"  ஒரே நேரத்தில் பயன்படுத்தி அஜித் - விஜய் உருவ படத்தை வரைந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் விழுப்புரத்தில் உள்ள ரசிகரும், ஓவியருமான செல்வம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

தமிழகத்தில் துணிவு வாரிசு படங்கள் நள்ளிரவு வெளியானதை அடுத்து ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்தும், பேனருக்கு பாலபிஷேகம் செய்தும், தாரை தப்பட்டையுடன் ஆடிப்பாடியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில், தல - தளபதி இருவரின் திரைப்படங்களும் வெற்றி அடைய வேண்டும் என பிரஷ்ஷை பயன்படுத்தாமல் இரண்டு "முழங்கை மூட்டுகளை" ஒரே நேரத்தில் பயன்படுத்தி அஜித் - விஜய் உருவ படத்தை வரைந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் விழுப்புரத்தில் உள்ள ரசிகரும், ஓவியருமான செல்வம்.

அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜிய்யின் 'வாரிசு' இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரிலீசானது. 2014-ல் பொங்கலுக்கு ஜில்லா - வீரம் படங்கள் ஒன்றாக வெளியாகின. தற்போது 9 வருடங்கள் கழித்து விஜய் அஜித் இருவரின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரம் அஜித் ரசிகர்

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம், அஜித் விஜய் நடிப்பில் இன்று வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெற்றி அடைய வேண்டி பிரஷ் பயன் படுத்தாமல் தன்னுடைய முழங்கை மூட்டுகளைக் கொண்டு ஒரே நேரத்தில் அஜித் விஜய் ஆகியோர் உருவ படங்களை வரைந்தார்.

இது தொடர்பாக ஓவியர் செல்வம் கூறுகையில் ”சத்தியமா சொல்றேன் நான் அஜித் ரசிகர் தான் ஆனாலும் தல - நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டி பிரஷ் பயன்படுத்தாமல் என்னுடைய இரண்டு முழங்கை மூட்டுகளைக் கொண்டு ஒரே நேரத்தில் அஜித், விஜய் ஆகியோரது உருவங்களை ஓவியமாக வரைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் செல்வம்.

இரு படங்களும் நல்ல முறையில் ஓடி வசூலை ஈட்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Local News, Thunivu, Varisu, Villupuram