முகப்பு /விழுப்புரம் /

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விமான நிலையம்

விமான நிலையம்

Villupuram District | விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி குறித்து, விழுப்புரம் ஆட்சியர் மோகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பயிற்சிக்கான கால அளவு 3 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சி (AERO SPACE SKILL SECTOR COUNCIL) -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go first, Vistra, Air India போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Airport, Local News, Villupuram