ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண்மை அறிவியல் கண்காட்சி..

விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண்மை அறிவியல் கண்காட்சி..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாதத்திற்கு ஒரு முறை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து விவசாயிகள், தாவர ஆராய்ச்சியாளர்கள் வருகை புரிந்தனர். விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாதத்திற்கு ஒரு முறை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர் கூட்டத்தில் பல பகுதிகளிலிருந்து விவசாயிகள், தாவர நோயியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.

அந்த சமயத்தில் விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்வார்கள். விவசாயக் குறைதீர் கூட்டம் நடைபெறும் போது ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை சம்பந்தப்பட்ட கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க:  உலகில் நான்கு குடும்பங்கள் மட்டுமே செய்யும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் பற்றி தெரியுமா?

திண்டிவனத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இயற்கை உரங்கள், இயற்கை திரவியங்கள், இயற்கை முறையில் வளர்ந்த மாஞ்செடிகள், கொய்யா செடிகள், உளுந்து விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உரங்கள் போன்ற பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக அந்தந்த பருவத்திற்கு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கண்காட்சி திடல் அமைந்தது. குறிப்பாக விழுப்புரத்தில் பிரதான பயிராக சவுக்கு மரங்கள், நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இரண்டிலும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதனை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க உரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:  10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

நெற்பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டு புழு நோய் அறிகுறிகள்:

இலைகள் நீள்வாக்கில் மடிக்கப்பட்டு இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை

முள்ளுள்ள கொப்பு கொண்ட இலை மடிப்புகளை திறக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு 5% அல்லது வேப்பெண்ணை 3 சதவீதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும் .

மேலும் படிக்க:  வறண்ட விருதுநகர்ல கண்ணுக்கு குளிர்ச்சியா இப்படியொரு இடமா..! வெளிநாட்டு பறவைகள் தேடி வரும் செங்குளம்.. 

மேலும் கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி போன்றவற்றில் நோய் தாக்குதல் இல்லாமல் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் எப்படி மகசூல் ஈட்டுவது? எப்படி பூச்சி தாக்குதல் தடுப்பது, தென்னை மரங்களில் அதிக காய்கள் காய்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற பல வழிமுறைகளை விவசாயிகளுக்கு தாவர நோயியல் துறையினர் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தாவரங்களில் ஏற்படும் நோய் தாக்குதல் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்து கொள்வதற்கு திண்டிவனத்தில் அமைந்துள்ள வேளாண்மை பல்கலைகத்திற்கு விவசாயிகள் வருகை புரிந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என தாவர நோயியல் துறையினர் கூறினர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram