விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற அருகில் உள்ள இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4,39,315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக 2023ஆம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அறிவித்தார்.
ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது என்றும், ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடரந்து ஜனவரி மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அவர்கள் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து 1,500 ரூபாயாக இம்மாதம் 1ஆம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..
இதனைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.