ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை - கலெக்டர் தகவல்

விழுப்புரத்தில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை - கலெக்டர் தகவல்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விவரங்களையும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள் முறையே, செஞ்சி தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,962 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், அமைவிடம் குறித்து ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைள் இருந்தால்6.9.2022ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

அதன் அடிப்படையில் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்செவலம்பாடியில் வாக்குச்சாவடி எண் 12, 13, 14, பெரிய நொளம்பையில் வாக்குச்சாவடி எண் 18, பின்னனூரில் வாக்குச்சாவடி எண் 71, தேவனூரில் வாக்குச்சாவடி எண் 52, வடபாலையில் வாக்குச்சாவடி எண் 120, மேல்புதுப்பட்டில் வாக்குச்சாவடி எண் 121, 122, மேல்அருங்குணத்தில் வாக்குச்சாவடி எண் 123, மேல்பாப்பாம்பாடியில் வாக்குச்சாவடி எண் 162, 163, போத்துவாயில் வாக்குச்சாவடி எண் 187, 188, துத்திப்பட்டில் வாக்குச்சாவடி எண் 201, கெங்கவரத்தில் வாக்குச்சாவடி எண் 221, தேவதானம்பேட்டையில் வாக்குச்சாவடி எண் 224, 226 என மொத்தம் 18 வாக்குச்சாவடிகளையும் மாற்றம் செய்வது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க விழுப்புரத்தில் சிறப்பு ஏற்பாடு..

இதேபோல், வானூர் தொகுதியில் டி.பரங்கினியில் வாக்குச்சாவடி எண் 8, வெங்காரத்தில் வாக்குச்சாவடி எண் 14, எடச்சேரியில் வாக்குச்சாவடி எண் 19, கிளியனூரில் வாக்குச்சாவடி எண் 23, பரிக்கல்பட்டில் வாக்குச்சாவடி எண் 43, வில்வநத்தத்தில் வாக்குச்சாவடி எண் 58, சின்னகொழுவாரியில் வாக்குச்சாவடி எண் 60, நெசலில் வாக்குச்சாவடி எண் 107, கரசானூரில் வாக்குச்சாவடி எண் 158, 159, 160, கொடுக்கூரில் வாக்குச்சாவடி எண் 182, மிட்டாமண்டகப்பட்டில் வாக்குச்சாவடி எண் 248, 249, கலிஞ்சிக்குப்பத்தில் வாக்குச்சாவடி எண் 276, 277 என மொத்தம் 16 வாக்குச்சாவடிகளையும் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

விழுப்புரம் தொகுதியில் குமளத்தில் வாக்குச்சாவடி எண் 277, 278 என 2 வாக்குச்சாவடிகளையும், விக்கிரவாண்டி தொகுதியில் எசாலத்தில் வாக்குச்சாவடி எண் 188, 189, 190, வடகுச்சிப்பாளையத்தில் வாக்குச்சாவடி எண் 216 என 4 வாக்குச்சாவடிகளையும் மாற்றம் செய்ய கோரப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருக்கோவிலூர் தொகுதியில் கழுமலத்தில் வாக்குச்சாவடி எண் 9, கோட்டகத்தில் வாக்குச்சாவடி எண் 10, குலதீபமங்கலத்தில் வாக்குச்சாவடி எண் 15,16, வீரபாண்டியில் வாக்குச்சாவடி எண் 31, 33, அருணாபுரத்தில் வாக்குச்சாவடி எண் 41, 42, குடமுருட்டியில் வாக்குச்சாவடி எண் 74 என 11 வாக்குச்சாவடிகளையும் ஆக மொத்தம் வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்வது தொடர்பாக மேல்நடவடிக்கை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட இருப்பதாக கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram