Home /viluppuram /

ஆண்களுக்கு நிகராக சிலம்பம் கற்பித்து அசத்தும் இளம் பெண் 

ஆண்களுக்கு நிகராக சிலம்பம் கற்பித்து அசத்தும் இளம் பெண் 

Silambam

Silambam

விழுப்புரம் காமதேனு  நகரில், தமிழச்சி சிலம்பப் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இப்பள்ளி கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த சிலம்ப பள்ளிக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் வருகின்றனர்.

    தமிழகத்தில் பள்ளி நாட்கள் முடிவடைந்த நிலையில், மாணவர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றி அமைத்தனர். பள்ளி மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டனர். அந்த திறமையில் ஒன்றான சிலம்பம் கலையும் பல மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.

    அதுபோல விழுப்புரம் காமதேனு நகரில், தமிழச்சி சிலம்பப் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இப்பள்ளி கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த சிலம்ப பள்ளிக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர்.

    மேலும் இந்த பயிற்சி பள்ளியை பற்றி பயிற்சியாளரான தமிழச்சி அன்பரசி கூறுகையில் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற, பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்பட்டது. நான் எம்.எ ஆங்கிலம் படித்து முடித்துள்ளேன். நான் பத்து வருடங்களாக சிலம்பம் பயின்று அதன் பிறகு சிலம்பப் பயிற்சி பள்ளி ஆரம்பித்துள்ளேன்.

    சிலம்ப பயிற்சியின் போது..


    நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சிலம்பம் பயில ஆரம்பித்தேன் . படிக்கும் போது என் பெற்றோர் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர் அதன் பிறகு திருமணம் ஆன பிறகும் என்னுடைய கணவர் மணி முழு ஆதரவு கொடுத்து என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் என தமிழச்சி அன்பரசி கூறினார்.

    மேலும் தான் கற்ற பாரம்பரிய சிலம்ப கலையை மற்ற மாணவர்களுக்கும் கற்று தர தமிழச்சி அன்பரசி சிலம்ப பயிற்சி பள்ளி ஆரம்பித்துள்ளார். இந்த சிலம்பு பயிற்சியில் 4 வயது முதல் 14 வயது உடைய மாணவ மாணவிகள் இடம்பெற்றனர்.இந்த கோடைகால சிலம்பப் பயிற்சி பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் வருகை புரிந்தனர்.

    மேலும் அன்பரசு வளவனூர் பகுதியிலும் சிலம்பம் கற்று தந்து வருகிறார். மேலும் இந்த கோடைகால சிலம்பு பயிற்சியின் இறுதி நாளில் மாணவர்களுக்கிடையே சிலம்பப் போட்டி வைத்து, வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுப்பொருட்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் கேடயம் வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Karthick S
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி