ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் திடீரென தோன்றிய குட்டி குற்றாலம் - பொதுமக்கள் உற்சாகம்

விழுப்புரத்தில் திடீரென தோன்றிய குட்டி குற்றாலம் - பொதுமக்கள் உற்சாகம்

விழுப்புரம்

விழுப்புரம் குட்டி குற்றாலம்

Viluppuram | வடகிழக்கு பருவமழையால் செஞ்சி அருகே உள்ள புதுப்பேட்டை மலை கிராமத்தில் ஒரு சிறிய அருவி உருவாகியுள்ளது. பொதுமக்கள் இதில் குளித்து மகிழ  ஆர்வம் காட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

வடகிழக்கு பருவமழையால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புதுப்பேட்டை மலை கிராமத்தில் ஒரு சிறிய அருவி உருவாகியுள்ளது. பொதுமக்கள் இதில் குளித்து மகிழ ஆர்வம் காட்டுகின்றனர். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மலைக் கிராமமான புதுப்பேட்டையில் மலைகளுக்கு இடையே உள்ள பாறைகளில் ஒரு சிறிய ஊற்று தோன்றியது. கனமழை காரணமாக அந்த ஊற்று சிறிய அருவி போல பெருக்கெடுத்தது. இதை இப்பகுதி மக்கள் ”பெருமாள் ஊத்து” என்று அழைக்கின்றனர். மேலும் சிலர் செஞ்சி குற்றாலம், மினி குற்றாலம் என மக்கள் செல்லமாக அழைக்கின்றனர்.

பாறைகளின் நடுவே இரண்டு இடங்களில் சுமார் 20 முதல் 30 அடி உயரத்தில் இருந்து தண்ணீரானது அருவியாக பாய்ந்து வெண்மையாக, பெரிய நீர்வீழ்ச்சி போன்று காட்சியளிக்கிறது. இந்த அழகிய அருவியில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ அதிக அளவில் வருகை தருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின் போது மட்டுமே இந்த அருவி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் இந்த அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரத்து இருக்கும் மேலும் குளித்து மகிழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். மற்ற நாட்களில் அவ்வளவாக தண்ணீர் இருக்காது. இந்த வார பெய்த கனமழையின் காரணமாக இந்த அருவி உருவாகி பொதுமக்கள் மகிழ்ச்சியாக அருவியில் நீராடி வந்தனர்.

விழுப்புரம் பகுதி மக்களுக்கு இந்த அருவி மிக அதிசயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் நெடிமொழியனூர், வராக நதி, வீடூர் அணை போன்ற நீர் நிலைகள் மட்டுமே உள்ளதால் இந்த குட்டி குற்றாலம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

20 ஆம் தேதிக்கு மேல் மழை மீண்டும் தொடரும் என வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் இங்கு வந்தால் நிச்சயமாக குற்றால அருவியில் குளித்த ஒரு உணர்வு ஏற்படும்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13