ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்... பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்...

விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்... பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்...

இலவச

இலவச மருத்துவ முகாம்

Villupuram | விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் உள்ளே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலம் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு பல பகுதியிலிருந்து பொதுமக்கள் வருகை புரிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் உள்ளே மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் மூலம் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை புரிந்தனர்.

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நடத்தியது.

இந்த மருத்துவ முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

இந்த மருத்துவ முகாமில் சென்னை அப்பல்லோவை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அவர்களின் குழுவினருடன் வருகை தந்திருந்தனர். அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்ற சோதனைகள் செய்யப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சென்னை அப்போலோவை சார்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் வந்திருந்தனர். இந்த மருத்துவ முகாமில் விழுப்புரம் மாவட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், விழுப்புரம் நகராட்சி ஆணையர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர்கள் பொதுமக்கள், மற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram