முகப்பு /விழுப்புரம் /

விதைநெல்லில் கலப்படம் செய்த அரசு அதிகாரிகள்.. நஷ்டத்தில் விழுப்புரம் விவசாயி!

விதைநெல்லில் கலப்படம் செய்த அரசு அதிகாரிகள்.. நஷ்டத்தில் விழுப்புரம் விவசாயி!

X
வேதனையில்

வேதனையில் விழுப்புரம் விவசாயி

Viluppuram farmer | காணை வட்டார வேளாண் அலுவலகம் மூலம்தான் பாரம்பரிய ரகமான தூயமல்லி ரக நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தேன். ஆனால், கலப்பட நெல் என்று கூறி அதனை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர் - விவசாயி புகார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் அதனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தண்டபாணி கானை வட்டார உதவி வேளாண் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்ட நெல்லை வாங்கி பயிர் செய்துள்ளார். அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கலப்படம் நெல்லை தந்துள்ளதால், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி நெல் சாக்குகளில் ஆட்சியர் அலுவலகம் முன் கீழே போட்டு தர்ணா போராட்டதில் ஈடுபட்டார்.

விழுப்புரம் அடுத்த காணை ஊராட்சி அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தண்டபாணி (வயது 64). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணை வட்டார உதவி வேளாண் அலுவலகம் மூலம் பாரம்பரிய தூயமல்லி நெல் ரக விதைகளை கிலோ 25 ரூபாய் வீதம், 10 கிலோ கொண்ட,12 பைகளில் மொத்தம் 120 கிலோ அளவில் வித நெல் வாங்கி, தன்னுடைய 7 ஏக்கர் நில பரப்பளவில் சாகுபடி செய்தார்.

நெல் ரகம எதிர்பார்த்தது போல நல்ல விளைச்சலை கொடுத்தது. விளைந்த நெல்லை 25 நாட்களுக்கு முன் அறுவடை செய்தார். 40 கிலோ எடை கொண்ட 240 சாக்கு மூட்டை நெல்லை அறுவடை செய்து,டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு கடந்த 20-ந் தேதி காணையில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்க சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், அந்த நெல் மூட்டைகளை எடைபோட்டு சரிபார்த்தனர்.அங்கிருந்த ஊழியர்கள், தண்டபாணியிடம் நீங்கள் கொண்டு நெல் மூட்டைகளில் கலப்படம் இருக்கிறது, இதனை கொள்முதல் செய்ய முடியாது என்றனர்.

அதற்கு தண்டபாணி காணையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகத்தான் பாரம்பரிய நெல்லான தூயமல்லி ரக நெல் விதைகளை வாங்கினேன், வேறு எங்கும் வாங்கவில்லை, வேளாண் அதிகாரிகள் கூறிய அறிவுரைப்படிதான் அந்த நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு சாகுபடி செய்தேன். நல்ல விளைச்சல் ஆகி அறுவடை செய்துள்ள நிலையில்,தற்போது கொள்முதல் செய்ய முடியாது என்றால் நான் எங்கு செல்வது என்றும், இதனை பயிர் செய்ததன் மூலம் எனக்கு ரூ.2½ லட்சம் வரை செலவாகியுள்ளது.

எனவே இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யுமாறு முறையிட்டுள்ளார். இருப்பினும் அங்கிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அந்த நெல் மூட்டைகளை வாங்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அந்த நெல் மூட்டைகளுடன் டிராக்டர், கடந்த 3 நாட்களாக காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனமுடைந்த விவசாயி, தூயமல்லி ரக விதை நெல் வாங்கிய அந்த பைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரிடம் அழைத்து சென்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் தண்டபாணி கூறியதாவது ,

காணை வட்டார வேளாண் அலுவலகம் மூலம்தான் பாரம்பரிய ரகமான தூயமல்லி ரக நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தேன். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது கலப்பட நெல் என்று கூறி அதனை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

இதனால் எனக்கு ரூ.2½ லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே என்னுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். அதற்கு, இதுபற்றி வேளாண் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

First published:

Tags: Local News, Villupuram, Viluppuram S22p13