காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள், நெல் ரகங்களை இயற்கை முறையில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகன் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். ஏற்கனவே பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டு மகசூல் ஈட்டி லாபம் பார்த்து வந்தவர், அதன்பின் இயற்கை விவசாயம் பற்றிய பல கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பங்கேற்றுள்ளார்.
வயலில் விளைந்த நெல் ரகத்தை இயற்கை பாரம்பரிய விதை திருவிழா போன்ற கண்காட்சியில் இடம்பெற செய்து மற்ற விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வந்துள்ளார். தற்போது முருகன் அவருடைய வயலில் 7 ஏக்கரில், பாரம்பரிய 13 நெல் ரகங்களான சிவன் சம்பா, துளசி வாசனை சம்பா, மாப்பிள்ளை சம்பா, இலுப்பை பூ சம்பா, தூய மல்லி, மல்லிகைப்பூ சம்பா, சீரகசம்பா, ரத்த சாலி, செங்கல்பட்டு சிறுமணி, வெள்ளைப்பொன்னி, கருப்புகவுனி, பூங்கார், சொர்ண மவுரி போன்ற 13 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தில், பாரம்பரிய ரகங்களில் லாபம் எடுக்க முடியுமா என்பதை பற்றி விவசாயி முருகனிடம் பேசியபோது,
“என்னுடைய வயலில் 13 நெல் ரகங்களை பயிரிட்டுள்ளேன். இது சம்பா பருவம் என்பதால், இப்பருவத்தில் விளையக்கூடிய அனைத்து நெல் வகைகளையும் பயிரிட்டுள்ளேன். பயிரிட்டுள்ள நெல் ரகங்களின் பருவ காலம் வெவ்வேறாக இருக்கிறது.
மாப்பிள்ளை சம்பா 160 நாட்களில் விளையக்கூடியது. சிவன் சம்பா 140 நாட்களில் விளையக்கூடியது. தூயமல்லி 135 நாட்களில் விளையக்கூடியது. இதுபோல ஒவ்வொரு நெல் ரகத்திற்கும் பருவ காலம் மாறிக்கொண்டே இருக்கும். பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்கள் மூலம் ஒவ்வொரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 12 முதல் 15 நெல் மூட்டைகளை பெறலாம். ஒரு ஏக்கரில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10,000 வீதம் முதலீடாக போட்டு உள்ளோம்.
அறுவடை செய்யப்பட்ட நெல் ரகங்களை அரிசியாக உள்ளூர் மட்டும் வெளியூரில் விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பூங்கார் போன்ற அரிசி வகைகளாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முதலில் வயலை இயற்கை முறையில் பதப்படுத்தி பின் நாற்றங்கால் விட வேண்டும். நாற்றாங்காலில் பூச்சி தொல்லைகள் இருந்தால் இயற்கை முறையில் ரசாயன உரங்களான ஜீவாமிர்தம், வேப்ப எண்ணெய், அமிர்த கரைசல் போன்றவை பயன்படுத்தி கொள்ளலாம். நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் லாபம் பார்க்க முடியும். மற்ற விவசாயிகளும் நிச்சயமாக இயற்கை விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும் எனவும் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram