Home /viluppuram /

90 கிட்ஸ்களின் ஆசை தீராத தின்பண்டங்கள் உங்களுக்கு என்னென்ன தெரியுமா?

90 கிட்ஸ்களின் ஆசை தீராத தின்பண்டங்கள் உங்களுக்கு என்னென்ன தெரியுமா?

Do

Do you know what 90 Kids' Unsatisfactory Snacks Are?

விழுப்புரம் மந்தகரை பகுதியில் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் என்ற கடையில் 90's களின் சிறப்பான இனிப்பு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

    நாட்டில் டெக்னாலஜி வளர வளர மக்களின் நினைவுகளும் ஒரு மெஷின் போல மாறிவிடுகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெக்னாலஜி மத்தியில், பல பழைய நினைவுகள் நம்மளை சில நிமிடம் புன்னகைக்க வைக்கும். அதுபோல 90's களின் நினைவுகள் என்றாலே அது தனித்துவமானது.

    மறந்து போகாத பொக்கிஷமான நினைவுகள் 90's நினைவுகள். அது போல அந்த காலத்தில் அவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளும் காணக்கிடைக்காததாகவும் சத்துள்ளதாகவும் இருந்தது.

    ஆனால் தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜியில் அதுபோன்ற சுவையும், சத்தும் நிறைந்த பொருட்களை காண்பது அரிதான ஒன்றாக விளங்குகிறது.

    தற்போது பல இடங்களில் 90களில் அனுபவித்த இனிப்பு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அதுபோல விழுப்புரம் மந்தகரை பகுதியில் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் என்ற கடை உள்ளது. சையது சுவீட்ஸ் முட்டை மிட்டாய் என்றாலே விழுப்புரத்தில் தெரியாத ஆட்களே இல்லை.அந்த அளவிற்கு முட்டை மிட்டை ஸ்வீட் பொதுமக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    அதுபோல இக்கடையில் முட்டை மிட்டாய் இனிப்பு வகை உடன் தொண்ணூறுகளின் விற்பனையான அனைத்து வகையான இனிப்பு வகைகளும் பல பகுதிகளுக்கு சென்று தேடி தேடி கண்டுபிடித்து ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இனிப்பான அக்காலங்களில் விற்பனையான பல இனிப்புவகைகளை தேனீர் சேகரிப்பது போல் சிறுக சிறுக சேகரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.

    இக்கடை மூன்று மாதங்களாக இயங்குகிறது. இங்கு 90s இல் பிறந்தவர்கள் சாப்பிட்ட அனைத்து வகையான இனிப்பு வகைகள் சேகரித்து உள்ளார்கள்.

    அதாவது பொம்மை பிஸ்கட், கமரகட்டு புளிப்பு மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் தேங்காய் மிட்டாய், போலோ, மாங்கோ மிட்டாய்,ரோஸ் மிட்டாய்,மம்மி டாடி, சாக்கோ சிப், எலந்த பழம்,எடைக்கல் மிட்டாய், கற்பூர மிட்டாய், சக்திமான் ஸ்டிக்கர்,ஸ்பூன் புளி, பாக்கெட் புளி, ஜெல்லி போன்ற 60க்கும் மேற்பட்ட மிட்டாய்கள் விற்பனைக்கு உள்ளது.

    மூன்று மாதங்களில் இந்த கடைக்கு பெரும் வரவேற்பை விழுப்புரம் நகர மக்கள் கொடுத்து உள்ளார்கள் என டைம் உரிமையாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முட்டை மிட்டாய் வாங்க வருபவர்கள், இந்த கலெக்ஷனை பார்த்த உடனே ஒரு நிமிடம் நின்று புன்னகைத்து, நாங்கள் அந்த காலத்து சாப்பிட்டேன் மிட்டாய் என புன்னகைக்கின்றனர்.

    தான் சாப்பிடுவது மட்டுமில்லாமல் தன் பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் வந்து செல்கிறார்கள்.

    மேலும் இந்த காலகட்டத்தில் துரித உணவுக்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்கும் வகையில் இந்த 90's களின் மிட்டாய் உறுதுணையாக இருக்கும் என கடையின் உரிமையாளர் சையத் கூறுகிறார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Karthick S
    First published:

    Tags: Viluppuram S22p13

    அடுத்த செய்தி