முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் கருவாச்சி கிராம தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..

விழுப்புரம் கருவாச்சி கிராம தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..

X
விழுப்புரம்

விழுப்புரம் கருவாச்சி கிராம தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா

Villupuram News | விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே அரசு பள்ளியில் பவள விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கருவாச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில் பவள விழாவும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பும், பள்ளியின் ஆண்டு விழாஎன முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தளவாட பொருட்களும், முன்னாள் மாணவர்கள் சார்பில் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பயில்வதற்கு ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் பள்ளி முழுவதும் 8 சிசிடிவி கேமராக்கள் என 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களுடன் பயின்ற சக நண்பர்களுடன் செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும், தமிழக அரசு, நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மாணவர்கள் மூலமாக வழங்கப்படும் தொகையும், அதனுடன் சேர்த்து அரசு பள்ளியை மேம்படுத்த செலுத்தும் தொகை போன்றவைகளுக்காக நிதி வழங்க வேண்டும் எனவும் தங்களைப் போன்று அனைத்து கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கு தங்களால் இயன்ற பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

 மேலும், கிராமப்புற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிகம் பேர் அரசு வேலைக்கு செல்வதில்லை என்ற கண்ணோட்டம் இருந்து வந்த நிலையில், இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் அரசு பணிகளிலும், தொழிலதிபர்கள் ஆகவும், ஏன் ஒரு படி மேலே போய் அதே பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என தங்கள் பள்ளியை குறித்து பெருமிதமாக பேசினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்றபோது பள்ளியில் செடி வைத்து, அந்த செடியை 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மரமாக வளர்ந்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். 75 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாக நின்று கொண்டு தங்களது சக மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    First published:

    Tags: Local News, Villupuram