Home /viluppuram /

Villupuram : 596 பேர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி ( சூந்து ) சுற்றி அசத்தல் - கண்களுக்கு விருந்தளித்த வீடியோ..

Villupuram : 596 பேர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி ( சூந்து ) சுற்றி அசத்தல் - கண்களுக்கு விருந்தளித்த வீடியோ..

விழுப்புரம்

விழுப்புரம் - மாவொளி சுற்றிய நிகழ்வு

Villupuram District: விழுப்புரம் அடுத்து பூரிகுடிசை பகுதியில் நடைபெற்ற பனைகனவு திருவிழாவில் 596 பேர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி சுற்றியது அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றது.

    விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘பனை கனவு’ திருவிழாவின் முதல் நாள் முடிவில் 596 பேர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி சுற்றியது அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றது.

    விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் பனைகனவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடக்கமாக பூரிக்குடி கிராமம் முழுவதுமாக 100க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும், சிலம்பம் சுற்றி வந்தும் பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர்.

    இதனை தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனங்கள்-ஐ உண்டு மகிழ்ந்தனர். பனை திருவிழாவில் பனை பொருட்களால் செய்யப்பட்டும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை விதை பொருட்கள் கண்காட்சியாக வைக்கபட்டு விற்பனை செய்யபட்டன. மேலும் பனையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பனையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

    முதல் நாளின் இறுதி நிகழ்வாக சனிக்கிழமையன்று இரவு, ஆண் பனையிலிருந்து உருவாக்கப்படும் மாவொளி சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல் முறையாக 596 பேர் ஒரே நேரத்தில் இணைந்து மாவொளி சுற்றி, அசிஸ்ட் வேல்டு வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகை புரிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாவொளி சுற்றும் போது வெளியேறிய தீப்பொறி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மேலும் கார்த்திகை பை சுற்றுவது, மாவொளி சுற்றுவது, சூந்து என மூன்று பெயர்களில் அழைக்கப்படும் இதனை சுற்றியது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி