விழுப்புரம் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைவாலும், தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குண்டுமல்லி, முல்லை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குண்டுமல்லி சீசன் இல்லாத காரணத்தால் குண்டுமல்லியின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. குண்டு மல்லி கிலோ 5000க்கும், முல்லை அரும்பு கிலோ 3000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கனகாம்பரம் கிலோ 3000க்கும், காக்கட்டான் 700க்கும், ஜாதிமல்லி 3000க்கும், பன்னீர் ரோஜா 250க்கும், சாமந்தி 200க்கும், கோழிக்கொண்டை 100க்கும், சம்பங்கி 200க்கும், கேந்தி சாமந்தி 150க்கும் விற்பனையானது.
விழுப்புரத்தில் இயங்க கூடிய பல்வேறு சில்லறை மலர் அங்காடிகளில் குண்டு மல்லி, முல்லை பூக்களின் விலை அதிகரித்ததால், அதிகம் பூக்கள் வாங்கும் பொதுமக்கள் தற்போது குறைவாகவே பூக்கள் வாங்கி செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பூக்களை பூஜைக்காக அதிகமாக வாங்கி செல்பவர்கள் தற்போது குறைவாக வாங்கி செல்கின்றனர். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Villupuram