Home /viluppuram /

விழுப்புரம் விவசாயிகளே.. இந்த பயிர்களுக்கு 40%  மானியம் தராங்க..

விழுப்புரம் விவசாயிகளே.. இந்த பயிர்களுக்கு 40%  மானியம் தராங்க..

விழுப்புரம் விவசாயிகளுக்கு  இந்த பயிர்களுக்கு 40%  மானியமா?

விழுப்புரம் விவசாயிகளுக்கு இந்த பயிர்களுக்கு 40%  மானியமா?

Villupuram Farmers subsidy | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
தோட்டக்கலை துறை சார்பில் பயிர்களுக்கும், பழங்களுக்கும் இத்தனை சதவீதம் மானியம் வழங்கப்படுகிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும், எவை எவைகளுக்கு வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம். மேலும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. எப்போ தெரியுமா?

இத்திட்டத்தில் வீரிய ஒட்டு காய்கறிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டர் ஒன்றுக்கு 15 ஆயிரம் நாற்றுகள், இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும், பழப்பயிர்கள் கொய்யா அடர் நடவுக்கான கொய்யா பதியன்கள், திசு வாழைக்கன்றுகள், பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், அத்தி, நெல்லி, பலா ஒட்டுச்செடிகள் ஆகியவையும், இதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

மேலும் மல்லிகைச்செடிகள், சாமந்தி குழித்தட்டு நாற்றுகள், நறுமண பயிர்களான மிளகாய் நாற்றுகள், மலைத்தோட்ட பயிரான முந்திரி சாதாரண நடவுக்கான செடிகள், அதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:   விழுப்புரம் வாசிகளே மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளதா? மானியம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பயிர்களில் நீர், களை மேலாண்மைக்கான நிலப்போர்வைகள் 50 சதவீத மானியத்திலும், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரப்படுக்கைக்கான மானியம் 50 சதவீதமும், தேனீ வளர்ப்புக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளன.

அங்கக வேளாண்மை சாகுபடி செய்து வரும் குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர மினி டிராக்டர், பவர்டில்லர்கள் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. நகரும் காய்கனி தள்ளுவண்டிக்கு 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இணையத்தில் பதிவு செய்ய மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள்,

http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration-new.php என்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு 183 கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு அந்த கிராமங்களில் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி