ஹோம் /விழுப்புரம் /

விடிய விடிய மழை.. மரக்காணத்தில் நீரில் மூழ்கிய 3,000 ஏக்கர் உப்பளம்..

விடிய விடிய மழை.. மரக்காணத்தில் நீரில் மூழ்கிய 3,000 ஏக்கர் உப்பளம்..

மரக்காணத்தில்

மரக்காணத்தில் நீரில் மூழ்கிய 3,000 ஏக்கர் உப்பளம்..

Marakanam Uppalam | விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மரக்காணம் பகுதிகளில் அமைந்துள்ள 3000 ஏக்கர் பரப்பளவிலுள்ள உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மரக்காணத்தில் அதிகபட்சமாக 4.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திடீரென பெய்த மழையால் உப்பளங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதில் பல பகுதிகளில் கனமழை பெய்தது .விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அதில் திண்டிவனம் 1.7 சென்டி மீட்டர் மழையும் ,அதிகபட்சமாக மரக்காணத்தில் 4.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மரக்காணத்தில் உள்ள பொது மக்களின் பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி தொழில் தான் நடைபெற்று. இந்த தொழிலை நம்பி பல தொழிலாளர்கள் உள்ளனர். மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள மக்கள் வேலை இன்றியும் வருமான இன்றியும் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மரக்காணம் பகுதிகளில் அமைந்துள்ள 3000 ஏக்கர் பரப்பளவிலுள்ள உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளம் முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

மேலும் மரக்காணம் கடற்கரை சற்று கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளது உப்பு மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகி உள்ளதால், உப்பள தொழிலாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram