விழுப்புரம் அடுத்த திருவக்கரை பகுதியில் 247 ஏக்கர் பரப்பளவில் 200-க்கும் மேற்பட்ட மரங்களை கொண்டுள்ளது இந்த தேசிய கல்மரப் பூங்கா. இந்த கல் மர பூங்காவை கண்டுகளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திலிருந்தும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்திற்கு கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ள மேட்டு நிலப்பகுதிகளில் மணல் பாறைகளுக்கிடையே கல்லாக மாறிய மரங்கள் காணப்படுகின்றன. இந்த படிவுப்பாறைகள், கடலூர் மணற் கல் தொகுப்பை சேர்ந்தவை.
இந்த கல்மரப் பூங்கா குறித்து இந்திய புவியியல் ஆய்வுத்துறை கூறுவதாவது, சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியிலிருந்த காடுகளிலிருந்து ஆற்றில் அடித்து கொண்டுவரப்பட்ட மரங்கள் மணலோடு, கூழாங்கற்களோடு சேர்ந்து இங்கிருந்த நீர்நிலைகளில் படிந்தன.

2 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரங்கள்
காலப்போக்கில் மென்மேலும் மணற்படிவங்கள் அடுக்கடுக்காகப் படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால், இவை மரத்தின் தன்மையை இழந்து, சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல்மரங்களாக மாறின.

2 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரங்கள்
ஆயினும் கல்மரங்களில் கால வளையங்கள், கணுக்கள் போன்றவை மரத்தின் தோற்றம் மாறாமல் அப்படியே காணப்படுகின்றன. இங்கு சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் 200 க்கும் மேற்பட்ட கல்மரங்கள் உள்ளன .
பெரும்பாலும் படுக்கை வாக்கில் கிடக்கும் இந்த அடிமரங்களில், கிளைகளோ, வேர்களோ, பட்டையோ காணப்படாமையால், இவை இப்போது உள்ள இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் கல்மரங்களாக மாறியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

கல்மரப் பூங்கா
இவற்றில் சில 30 மீ நீளமும் 1.5 மீ குறுக்களவும் உடையவை. அதுமட்டுமல்லாமல் இது போன்று புவியில் சம்பந்தப்பட்ட பல தேடல்களை தேடிவரும் அறிஞர் எம்.சொன்னேர்ட் ( 1781 ) எனும் ஐரோப்பிய அறிஞர் இந்த கல்மரங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார் . இவரின் ஆய்வில் இவைகளில் சில திறந்த விதை தாவர இனத்தையும் சில மூடிய விதை தாவர இனத்தையும் சேர்ந்தவை.
இக்காலத்தில் உள்ள புன்னை, கட்டாஞ்சி, ஆமணக்கு குடும்பங்களை சேர்ந்த மரங்களும், புளியமரத்தைப் போன்றவைகளும் இங்கே கல்மரங்களாக உள்ளன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த அரியவகை கல்மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் வரலாற்றுச் சான்றுகளாகும் .
இவ்வகை கல்மரங்கள் மிகவும் கவனமாக போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியனவாகும் . நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரியவகை தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களைப் பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறை 1957 ஆம் ஆண்டிலிருந்து,இந்த கல்மரங்களை போற்றிப் பாதுகாத்து வருகிறது.
மேலும் இந்த கல்மர பூங்காவில் 300 ஆண்டுகள் பழமையான மரங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை புரிந்து இந்த சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக விளங்கும் கல்மரப் பூங்காவை பார்த்து செல்கின்றனர்.
தேசிய கல்மரப் பூங்காவுக்கான கூகுள் மேப்
அதுமட்டுமல்லாமல் புவியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல் மர பூங்காவை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பாக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த கல் மர பூங்கா விற்காக 123 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் மற்றும் இதர பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.