ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - குடிமகன்கள் அதிர்ச்சி.!

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - குடிமகன்கள் அதிர்ச்சி.!

விழுப்புரம்

விழுப்புரம்

Viliuppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி,  மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மிலாடி நபி ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும்.

தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் மற்றும் மதுபான கூடங்கள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு இந்த தினங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் சிவா விஷ்ணு ஆலயத்தில் நவராத்திரிக்காக 108 குத்துவிளக்கு பூஜை

எனவே, காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது. இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அன்றை தினங்களில் மதுவை பதுக்கி வைத்து கள்ள சந்தைகளிலும் விற்றாலும், வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram