ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் சிவா விஷ்ணு ஆலயத்தில் நவராத்திரிக்காக 108 குத்துவிளக்கு பூஜை

விழுப்புரம் சிவா விஷ்ணு ஆலயத்தில் நவராத்திரிக்காக 108 குத்துவிளக்கு பூஜை

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Siva Vishnu Temple | விழுப்புரம் குழந்தைவேல் நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில்,. நவராத்திரி பூஜையின் 5வது நாளான இன்று பக்தர்கள் 108 குத்துவிளக்குகளை ஏற்றி நவராத்திரி கொலுவை வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, கோயில்கள், வீடுகளில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில்,. நவராத்திரி பூஜையின் 5வது நாளான இன்று பக்தர்கள் 108 குத்துவிளக்குகளை ஏற்றி நவராத்திரி கொலுவை வழிபட்டனர்.

மேலும் படிக்க:  சோழ மன்னனை சிறைபிடித்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.. 13-ம் நூற்றாண்டு கற்சிலை கண்டெடுப்பு

சிவன் வழிபாடு நடைபெறும் சிவராத்திரி போல, அம்பாளுக்கு நவராத்திரி. பெண்கள் தங்கள் குடும்பம் விருத்தி அடைய வேண்டும் எனவும், வீட்டில் ஐஸ்வர்யம் வந்து சேர வேண்டும் எனவும், வீட்டில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்க வேண்டும் என்று எண்ணியே குத்துவிளக்கு பூஜை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து அனைத்து கஷ்டங்களையும் அம்பாளின் காலடியில் போடுவதாக எண்ணி இந்த குத்துவிளக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram