முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் 1000 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி சாதனை!

விழுப்புரத்தில் 1000 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி சாதனை!

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் 1000 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி சாதனை

Villuppuram Mavoli Record : விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் பனை கனவு நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசை என்ற கிராமத்தில் 1000திற்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி (சுளுந்து ) சுற்றி அசத்தி சாதனை படைத்தனர்.

விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் பனைகனவு திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி, நம்மாழ்வார் புக் ஆப் ரெக்கார்டஸ் புத்தகத்தில் இடம்பெற்றன.

விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் பனைகனவு திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் தொடக்கமாக பூரி குடி கிராமம் முழுவதுமாக 100 க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும் சிலம்பம் ஆடிவந்தும் பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர்.

விழுப்புரத்தில் 1000 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி சாதனை

இதையும் படிங்க : தமிழகத்திலேயே முதல்முறை..! கோவையில் சி.என்.ஜி சிலிண்டர்களை சோதனை செய்யும் மையம் துவக்கம்..!

இதனைத்தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனங் கள்ளை உண்டு மகிழ்ந்தனர். பனை திருவிழாவில், பனை பொருட்களைக்கொண்டு செய்யப்பட்டும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை விதை பொருட்கள் கண்காட்சியாக வைக்கபட்டு விற்பனை செய்யபட்டன.

மேலும் பனை மரத்தால், ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பனையிலிருந்து கிடைப்பவைகளைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

விழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்வான இரவு ஆண் பனையிலிருந்து உருவாக்கப்படும் மாவொளி சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல் முறையாக 1000 திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் இணைந்து மாவொளி சுற்றி நம்மாழ்வார் புக் ஆப் ரெக்கார்டஸ் புத்தகத்தில் இடம்பெற செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகை புரிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாவொளி சுற்றும் போது வெளியேறிய தீப்பொறி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், கார்த்திகை சுற்றுவது, மாவொளி சுற்றுவது, சுளுந்து என மூன்று பெயர்களில் அழைக்கப்படும் இதனை சுற்றியது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Villupuram