முகப்பு /விழுப்புரம் /

ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் தரும் முட்டைக்கோஸ் சாகுபடி.. விவரிக்கும் விழுப்புரம் விவசாயி

ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் தரும் முட்டைக்கோஸ் சாகுபடி.. விவரிக்கும் விழுப்புரம் விவசாயி

X
1

1 lakh per acre of cabbage cultivation

Villupuram cabbage Cultivation | ஹரி ராணி என்ற ரகத்தை சேர்ந்த முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம்  மயிலம் வட்டம் சித்தணி கிராமத்தில் விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.

சமவெளி பகுதிகளில் இது குளிர்கால பயிராக சாகுபடி செய்யப்படும் இந்த பயிருக்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிராகும்.சமவெளிப்பகுதியில் நவம்பர் டிசம்பர் ஜனவரி போன்ற மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சித்தணி கிராமத்தில் பழனி (45) என்ற விவசாயி 20 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.அதுபோல, தன்னுடைய 60 சென்ட் வயலில் ஹரி ராணி என்ற ரகத்தை சேர்ந்த முட்டைக்கோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், என்னுடைய வயலில் 90 நாட்களில் வளரக்கூடிய பயிரை நான் பயிர் செய்து உள்ளேன். இந்த மாதம் முடியும் தருவாயில் இந்த முட்டைக்கோஸ் அனைத்தும் அறுவடை செய்யப்படும் என்றும் இதற்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கூறினார். மேலும் முட்டை கோஸ்க்கு தேவையான நாற்றங்காலை ஓசூரில் சென்று வாங்கி வந்தேன் என்றும் அதன் பிறகு முட்டைகோஸ் நாற்றங்காலை நடவு செய்து பயிரிட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து விவசாயி பழனி கூறுகையில் நான் ஹரிராணி என்ற ரகத்தை பயிர் செய்து உள்ளேன். முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும்,சமவெளிப்பகுதிகளில் அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்கவேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்கவேண்டும் என்றும் பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டு புழுக்கள் தாக்குதல் இருக்கும் என்றார்.

இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் இலைகளை அனைத்தும் புழுக்கள் அரித்துவிடும். எனவே, அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத் துறையினர் பரிந்துரை பெற்றுத் தெளிப்பது சிறந்தது என கூறினார்.

மேலும் இயற்கை முறையில் வேப்ப எண்ணெய் தெளித்தல் நன்றாக இருக்கும் என கூறிய விவசாயி பழனி, முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும் என்றார். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 100% மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்படுவதாகவும் தோட்டக்கலை துறை மூலம் நோய் தாக்கம் இன்றியும், இயற்கை முறை சாகுபடியில் விளைச்சல் அதிகரிக்கும் வகையில்,முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்படுகிறது என்றார்.

அது மட்டுமல்லாமல் செடிகளுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என தோட்டக்கலை துறை அதிகாரிகள் வயலுக்கு வந்து பார்த்து, ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதற்கான அறிவுரைகளையும் தீர்வுகளையும் வழங்கி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாற்றங்கால் நடவு செய்த பிறகு, 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றி விட்டதற்கான அறிகுறி ஆகும். முக்கியமாக,செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு காயும் குறைந்த பட்சம் இரண்டு முதல் இரண்டரை கிலோ எடை உள்ளதாக இருக்கும். ஒரு கிலோ ரூ.10 ரூபாய்க்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும். விலை குறைவாக போனால் நஷ்டம் தான் ஏற்படும் .

ஒரு ஏக்கரில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை முட்டைகோஸ் சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியும். அறுவடை செய்யப்படும் அனைத்து காய்களும் விழுப்புரம் பாண்டி போன்ற சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நிச்சயமாக நல்லா பராமரிப்பு நல்ல தண்ணீர் வசதியும் இருந்தால் முட்டைகோஸ் சாகுபடி நல்ல லாபம் பார்க்க முடியும் என விவசாயி பழனி கூறினார்

First published:

Tags: Local News, Villupuram