போதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..

ட்ரெண்டிங்13:38 PM July 30, 2019

காவல்துறை சப் இன்ஸ்பெக்டருக்கு போதையில் முத்தம் கொடுத்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் போனால பண்டிகை என்ற பெயரில் அந்த மாநில மக்களின் சம்பிரதாய திருவிழா மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது. கடந்த ஞாயிறு அன்று இரவு ஹைதராபாத் டி.ஆர்.டி காலணி வித்யாநகரில் போனால பண்டிகை திருவிழா நடை பெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் மது அருந்திவிட்டு திருவிழா ஊர்வலத்தில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் ஊர்வலத்தில் நடனம் ஆடி சென்று கொண்டிருந்த வங்கி ஊழியரான வாலிபர் பானு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ.மகேந்தரை திடீர் என்று இழுத்த அவருக்கு முத்தம் கொடுத்தார். வாலிபர் பானுவின் செயலால் கோபம் அடைந்த எஸ்.ஐ.மகேந்தர் அவரை அறைந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் எஸ்.ஐ மகேந்தருக்கு முத்தம் கொடுத்த பானு மீது அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, அத்துமீறி நடந்து கொண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த நல்லங்குண்டா காவல் நிலைய போலீசார் வாலிபர் பானுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories