பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.