முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது

தமிழ்நாடு19:40 PM July 17, 2019

கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுந்தரத்தின் மகன் எழிலன். இவர் தனது முகநூல் பக்கத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்து பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் எழிலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளப்பூலியூர் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், எழிலனை கைது செய்த போலீசார், மத கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV