முகப்பு » காணொளி » தமிழ்நாடு

உல்லாசமாக இருக்க போலீசுக்கே மெசேஜ் அனுப்பிய மசாஜ் சென்டர்..

தமிழ்நாடு22:33 PM September 19, 2019

மதுரையில் காவலரையே உல்லாசத்திற்கு கூப்பிட்ட கும்பல் கைதாகி உள்ளது. மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவலராக பணியாற்றி வருபவர் பழனிகுமார். இவரது அலைபேசி எண்ணிற்கு LOCANTO App மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா என்ற ஆசை வார்த்தையை கூறி, விருப்பம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என அனுப்பியிருந்தது ஒரு கும்பல். அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போல காவலர் பழனிகுமார் அந்த கும்பலிடம் பேசியுள்ளார். அவர்களும் அதை நம்பி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் என்றும், ஒரு இரவுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனக் கூறியுள்ளனர். பின்னர் சக போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, பாலியல் கும்பல் இடத்திற்கு பழனிகுமார் சென்றுள்ளார். அங்கு, அய்யனார், சேகர், மனோஜ்குமார், நந்தினி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், இங்கே வந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என பழனிகுமாரிடம் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அந்த நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மதுரையில் காவலரையே உல்லாசத்துக்கு கூப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV