Home »

News18 Tamil Videos

» entertainment

உச்சத்தில் ஹீரோக்கள் சம்பளம்... தாக்குப்பிடிக்குமா தமிழ் சினிமா?

Web Deskபொழுதுபோக்கு21:17 PM August 22, 2021

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு அவருக்கான சம்பளம் 120 கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற உயரத்தை நடிகர் விஜய் எட்டியிருக்கிறார் என்கிறார்கள். இந்தச் சூழலில் நட்சத்திர ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்துகொண்டே போவது பொருளாதார ரீதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது நட்சத்திரங்களின் சந்தை மதிப்பைக் காட்டுகிறதா என்ற கேள்வி முதன்மையாக எழுகிறது. இந்தக் கேள்வியைத் தாண்டி, கொரோனா பெருந்தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் தமிழ் சினிமாவைத் தூக்கி நிறுத்தவும், தியேட்டர்களில் படங்களை வெளியிடமுடியாமல் எதிர்காலம் குறித்த கவலையில் துவண்டுபோயிருக்கும் தயாரிப்பாளர்களைக் கைதுக்கிவிடவும் பெரிய நட்சத்திரங்கள் செய்யவேண்டியது என்ன என்ற கேள்வியும் கூடுதலாக எழுகின்றன.

சற்றுமுன் LIVE TV

Top Stories