முகப்பு /செய்தி /வேலூர் / மின்கம்பத்தில் தலைகீழாக தொங்கி டான்ஸ் ஆடிய இளைஞர்... கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

மின்கம்பத்தில் தலைகீழாக தொங்கி டான்ஸ் ஆடிய இளைஞர்... கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

டான்ஸ் ஆடிய இளைஞர்

டான்ஸ் ஆடிய இளைஞர்

jolerpet | ஜோலார்பேட்டை அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக  நின்று நடனமாடி சாகசம் செய்த வாலிபர்..

  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழாவின் போது இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் தொங்கியபடி நடனமாடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அம்மையப்பன் நகர் ஊராட்சிக்கு உட்பட்ட வரதகவுண்டர் வட்டம் பகுதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கூழ் வார்த்தல் நிக்ழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி, கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். இதற்காக, முக்கிய வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி தலைகீழாக நடனமாடினார்.

மேலும் படிக்க... ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள சிக்னல் அருகே ரயில்கள் அரைமணி நேரம் வரை காத்திருப்பது ஏன்?

உயிருக்கு ஆபத்தான முறையில் மின் கம்பத்தில் ஏறி நடனமாடி, மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக விளங்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: M.வெங்கடேசன்,திருப்பத்தூர் 

First published:

Tags: Dance, Hindu Temple, Jolarpet Constituency, Vellore