முகப்பு /செய்தி /வேலூர் / மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வட்டாட்சியர்: பணி நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வட்டாட்சியர்: பணி நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்

கைதானவர்

கைதானவர்

வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் இரவு பகலாக மணல் கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது

  • Last Updated :
  • Vellore, India

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மணல் கடத்தல் கும்பலிடம் வட்டாட்சியர் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில், வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் இரவு பகலாக மணல் கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி, உதயேந்திரம் பேரூராட்சி 10வது வார்டு திமுக உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜூவிடம், வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்க: வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறார்கள் மீட்பு

இந்த நிலையில் வட்டாட்சியர் சம்பத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சாந்தி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

First published:

Tags: Sand mafia