முகப்பு /செய்தி /வேலூர் / வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறார்கள் மீட்பு

வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறார்கள் மீட்பு

வேலூர்

வேலூர்

வேலூரில் பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பி, மாடியில் ஏறி அட்டகாசம் செய்த சிறார் குற்றவாளிகள் மீட்கப்பட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

வேலூரில் சிறார் குற்றவாளிகள் 6 பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய நிலையில், காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீண்டும் அவர்களை பிடித்தனர்.

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் சமூக நலத்துறை மூலம் நடத்தப்படும் இளம் குற்றவாளிகளுக்கான சிறார் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் இருந்து நேற்றிரவு  6 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். சிறுவர்கள் வெளியேறியதை அடுத்து வடக்கு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களைத் தேடினர்.

குறிப்பிட்ட அரசு இல்லத்தின் அருகே உள்ள மாடியில் அவர்கள் ஏறி அட்டகாசம் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். ஆனால், தங்களை நெருங்க முடியாதபடி காவல்துறையினர் மீது அவர்கள் தீப்பந்தங்களை வீசினர்.

Also Read : தமிழ் புத்தாண்டு...கோவில்களில் சிறப்பு வழிபாடு...

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோருடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி சிறார் குற்றவாளிகளை கீழே வரவழைத்தார்.இந்த இல்லத்தில் இருந்து கடந்த மாதம் 6 பேர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: TN Police, Vellore