முகப்பு /செய்தி /வேலூர் / பூனைக்கு தாயான நாய்... அமைதியாக பாலுட்டும் அதிசயம்... வைரலாகும் வீடியோ

பூனைக்கு தாயான நாய்... அமைதியாக பாலுட்டும் அதிசயம்... வைரலாகும் வீடியோ

பூனைக்கு பால் கொடுக்கும் நாய்

பூனைக்கு பால் கொடுக்கும் நாய்

வேலூரில் பூனைக் குட்டி நாய் பாலூட்டும் நிகழ்வு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Vellore, India

காட்பாடி அருகே தாய் இன்றி தவித்து வந்த பூனைக் குட்டிக்கு  நாய் ஒன்று பாலூட்டும் அதிசய நிகழ்வை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி வரும் நாய் ஒன்று அங்கு தாய் இன்றி தவித்த வந்த ஒரு பூனை குட்டிக்கு பாலூட்டி வருகிறது. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பூனைகளை கண்டால் சீரும் இயல்புள்ள நாய் மறுப்பு தெரிவிக்காமல் அந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்து வருகின்றது.

மேலும் தன் குட்டிகள் பால் கொடுத்தால் கூட எழுந்து செல்லும் நாயானது பூனைக்குட்டி பால் குடிக்கும் பொழுது அமைதியாக இருக்கிறது. இந்த நிகழ்வு அப்பகுதி பொதுமக்களை நெகிழ வைத்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

செய்தியாளர் - செல்வம், வேலூர்.

top videos
    First published:

    Tags: Local News, Vellore