முகப்பு /செய்தி /வேலூர் / "ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு!

"ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு!

அரக்கோணம் எம்.எல்.ஏ.

அரக்கோணம் எம்.எல்.ஏ.

Arakonam Admk MLA | சட்டப்பேரவையில் நடந்த தகராறை தொடர்ந்து அரக்கோணம் எம்.எல்.ஏவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Arakonam (Arakkonam), India

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ . பன்னீர்செல்வத்துக்கு, சபாநாயகர் அப்பாவு இந்த மசோதா தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

அப்போது, அதிமுக என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கும், ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அருண்குமார், கோவிந்தராஜ், அரக்கோணம் ரவி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

top videos

    அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அரக்கோணம் ரவி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அரக்கோணம் ரவி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, OPS, Vellore