முகப்பு /செய்தி /திருச்சி / பிரபல பைக் ரேஸருக்கு 11 ஆயிரம் அபராதம்... 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு.... திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கை

பிரபல பைக் ரேஸருக்கு 11 ஆயிரம் அபராதம்... 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு.... திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கை

அசார்

அசார்

Trichy | இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலங்களில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் YouTube லைவ், Facebook லைவ் என சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது வரை காணொளி காட்சிகளை பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர். Travel vlogger டிடிஎஃப் வாசன் இதற்கு முன் உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி Like-க்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்கள் பலரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள்  இருந்த நிலையில் அவர் பதிவிட்ட அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை தற்போது 1 .20 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒரு பிரபல நடிகருக்கு கூட சேராத கூட்டம் இந்த கெட்டவன் ஆசாருக்கு கூடுகிறது. தனது பெயரில் அதாவது அசார் கெட்டவன் என்ற பெயரிலேயே இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறார். தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக சுற்றி யாருப்பா நீ?  எங்க போற? என பலரும் பிரமிப்புடன்  பார்க்கும் வகையில் தனது பின்னே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தனது  பயணத்தை தொடங்குவார்.

அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி மாலை திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே ஸ்டூடண்ட்ஸ் ரோடு எனப்படும் நீதிமன்ற சாலையில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உறுமல்களுடன் கூச்சலுக்கு இடையே தனது பயணத்தை தொடர்ந்தார். இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர் பின்னே வந்த பலரும்  பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் காலெடுத்து வைக்கும் இளைஞர்கள் தான்.

இரு தினங்களுக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திருச்சியில் சந்திப்போம் 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு என  தனது சப்ஸ்கிரைபர்களுக்கு தகவல் தெரிவித்த அசார் அதன்படி இன்று மாலை தனது அலப்பறை ஆட்டத்தை  அரங்கேற்றினார்.

இதுகுறித்த செய்தி தொகுப்பு நமது நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதன் பின்னர் அசார் என்ற நபரை அழைத்து விசாரணை செய்த திருச்சி செசன் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் ஆசார் என்ற நபரின் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேர்ப்பது பொது இடத்தில் அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுவது அல்லது சவாரி செய்தல், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுதல், அதிக ஒளி எழுப்புதல், உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 11 ,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருடு போன செல்போன்களை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்... இன்று முதல் புதிய திட்டம் அமல்..!

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா நேற்று பேட்டியளித்தார்

தொடர்ந்து இதுபோல் பைக் சாகசங்கள் திருச்சியில் பெருகி வரும் சூழ்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள கேமராக்கள் மூலம் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

top videos

    செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி,

    First published:

    Tags: Arrested, Crime News, Trichy