ஹோம் /திருச்சி /

கொரோனா காலத்தில் மூடிய இளைஞர் விடுதி.. திருச்சியில் மீண்டும் திறக்கப்படுமா?

கொரோனா காலத்தில் மூடிய இளைஞர் விடுதி.. திருச்சியில் மீண்டும் திறக்கப்படுமா?

X
திருச்சி

திருச்சி

Trichy District News : கொரோனா  காலத்தில் மூடப்பட்ட இளைஞர் விடுதியை மீண்டும் தூய்மைப்படுத்தி திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே மத்திய அரசின் இளைஞர் நலத்துறை சார்பில் இளைஞர் விடுதி உள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் தங்கும் வகையில் இரண்டு தளங்களுடன் அமைந்துள்ள இந்த விடுதியில் தங்குவதற்கு நாள் ஒன்றிற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து திருச்சிக்கு விளையாட்டு போட்டிகளுக்காக பங்கேற்க வருவோர் மற்றும் அருகில் உள்ள பல கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி பயனடைந்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் பராமரிப்பாளர் நியமிக்கப்படாததால் இந்த விடுதியை அண்ணா விளையாட்டு அரங்கஅதிகாரிகளே பராமரித்து வந்தனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் முற்றிலுமாக இந்த விடுதியானது மூடப்பட்டது. கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய நிலையில் இந்த விடுதி மட்டும் மீண்டும் திறக்கப்படவில்லை.

இக்கட்டிடம் பல ஆண்டுகள் ஆனதாலும் ஆண்டு கணக்கில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததாலும் கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி செடி கொடிகள் என புதர்மண்டி காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க : திருச்சியில் வாழ்ந்துள்ள கற்கால மனிதர்கள்... தடயங்கள் கண்டெடுப்பு...

உடனடியாக விடுதியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy