மனநிலை பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் தலமாகவும், பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தலமாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது திருச்சி அருகே சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்.
அமைதியான கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது தான் ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி கோயில். குணசீல மகரிஷி தவமிருந்து வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது. இங்கே மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமலையில் வாசம் செய்யும் ஏழுமலையானே வந்து குடியமர்ந்து, செங்கோலுடன் இங்கு ஆட்சி செய்வதாக ஐதீகம்.
கிழக்கு நோக்கி கோயில் அமைந்திருந்தாலும், தென்புறத்தில் சாலையையொட்டி அழகிய முகப்புடன் நுழைவு வாசல் அமைந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இத்திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று 48 நாட்கள் கோயில் தங்க வைத்து வைத்து, காவிரி நதியில் நீராடி பிறகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதியை வணங்கி, வழங்கப்படும் தீர்த்தத்தை மேல் தெளித்தும், குடித்தும் வந்தால் 48 நாட்களின் முடிவில் தெய்வத்தின் அருளால் அவர்கள் மனநலம் பெறுவர் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்
அதேபோல் யந்திரத்தில் பெருமாள் மந்திரம் எழுதி அதை பெருமாள் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு அதைத் தாயத்தாக அணிந்து கொள்கிறார்கள். இதனால் எல்லா மன நோய்களுக்கும் நிவர்த்தியாகி விடும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசின் மனநல சுகாதார மறுவாழ்வு மையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பங்குனி சனிக்கிழமையில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். பெருமாளை, கண்ணாரத் தரிசித்தால் உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என பல பாதிப்புகள் உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு உடல் மற்றும் மன நலம் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy