முகப்பு /திருச்சி /

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. பெண் காவலர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி!

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. பெண் காவலர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி!

X
சைக்கிள்

சைக்கிள் பேரணி.

Trichy News | தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பெண் காவலர்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

பொன்விழா ஆண்டையொட்டி பெண் காவலர்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்.

கடந்த 1973 ம் ஆண்டுதமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்த பேரணி சென்னையில் இருந்து காஞ்சிபுரம்,திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வருகின்ற 28 ந்தேதி கன்னியாகுமரி சென்றடைகிறது.

இந்நிலையில் திருச்சி சமயபுரம் வந்தடைந்த சைக்கிள் பேரணியில்பயணம் செய்யும் பெண் காவலர்களை பாராட்டும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் வரவேற்று பெண் காவலர்களுடன் இணைந்து சைக்கிளை ஓட்டி சென்றார்.சமயபுரம் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்ட காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் சிறப்புரையாற்றிய பின்பு பெண் காவலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்புகளை கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் லால்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காவலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Police, Trichy