தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், Swachh Survekshan என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இந்த பட்டியலில் திருச்சி 382 நகரங்களில் 262வது இடத்தில் உள்ளது, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் பின்தங்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது திருச்சி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மூன்று வெவ்வேறு கட்டங்களின் கீழ் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், திருச்சி மூன்றாம் கட்டத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றது, ஆனால் முதல் ,இரண்டு கட்டங்களில் அதன் மோசமான செயல்திறனால் சிறந்த தரத்தை இழந்தது என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தூய்மையான நகரங்களில் சிறந்த நகரமாக விளங்கிக் கொண்டிருந்த திருச்சி மாநகரம் தற்போது அதன் மதிப்பை இழந்து விட்டது.
மேலும் படிக்க: சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!
மேலும் இந்த ஆய்வில் மொத்தம் 7,500 மதிப்பெண்களில், திருச்சி 2,473.78 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. சுமார் 48% மதிப்பெண்கள், திட்டங்கள் மற்றும் ஆவணங்களைச் செயல்படுத்துவதை உள்ளடக்கிய சேவை நிலை முன்னேற்றப் பிரிவில் இருந்து வந்துள்ளது. குடிமக்கள் ஈடுபாடு மற்றும் குறைகளைத் தீர்ப்பது, திருச்சி 2,250 மதிப்பெண்களுக்கு 1,078 மதிப்பெண் பெற்றுள்ளது. திருச்சி, சாலைகள, சந்தைகள், குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டாலும், பொது கழிப்பறைகளை பராமரிப்பதில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.
நகரை அழகுபடுத்துதல், வடிகால் சுத்தம் போன்ற அளவுருக்களில், திருச்சி சராசரி மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. திறந்தவெளி சிறுநீர் கழித்தல் மற்றும் பொது இடங்களில் போதுமான சிறுநீர் கழிப்பறைகள் இல்லாதது ஆகியவை குறைபாடுகளாக இருந்தன.
மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!
திருச்சியில் வலுவான பொதுக் கழிப்பறை உள்கட்டமைப்பு மற்றும் மலக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதில் நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் நகரம் முழுவதும் உள்ளடங்கிய துப்புரவு (CWIS) திட்டத்தை செயல்படுத்துவதால், பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் மோசமான செயல்திறன் இருந்து வருகிறது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் இரண்டு காலாண்டுகளில் திருச்சி மாநகராட்சி 1,200 மதிப்பெண்களுக்கு 459 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது.
மூன்றாம் கட்டத்தில் , திருச்சி 1,200 மதிப்பெண்களுக்கு 735 மதிப்பெண்களைப் பெற்றது, இது முன்னேற்றப் பிரிவில் மிக உயர்ந்த ஒன்றாகும். இருப்பினும், முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்ட தவறுகளை ஈடுகட்ட கடைசி நிமிட முயற்சிகளும் செயல்திட்டங்களும் போதுமானதாக இல்லை. பொது கழிப்பறைகளின் பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த தரவரிசையை மேம்படுத்துவோம். கடந்த காலாண்டின் செயல்திறன் எங்களின் களப்பணிக்கு சான்றாகும் .
மேலும் படிக்க: ராவணனின் மகன் பெயர் எப்படி திருச்சிக்கு சூட்டப்பட்டது? - சுவாரஸ்ய தகவல்கள்...!
ஆனால் திருச்சி மாநகராட்சியில் இன்னும் பல திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தாமல், அவசர நிலையில் செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொள்ளாம, திட்டங்களை முடிக்க வேண்டும் எண்ணம் மட்டும் தான் அதிகாரிகள் மத்தியில் உள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல், இதற்கு காரணம் சாலை வ்சதிகள் சரியான முறையில் ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கிய காரணம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை அடிப்படை கட்டமைப்புகளில் முழுமையாக கவணம் செலுத்தாதன் காரணம். குறிப்பாக தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 121 இடத்தில் இருந்து பின் தங்கி இந்த ஆண்டு 262 இடத்திற்கு திருச்சி வந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy