இந்தியா உட்பட நான்கு நாடுகளுக்கு ஸ்கூட்டரில் தனது தாயுடன் கோயில்களை சுற்றி தரிசனம் செய்யும் முன்னாள் மென்பொருள் அதிகாரி கிருஷ்ணகுமார். அவர் ஏன் இதை செய்கிறார் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே போகாதே என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஆறு இலக்கு எண்ணில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர். தனது தந்தையின் மறைவு அவரது வாழ்க்கையே புரட்டி போட்டது.
2015ம் ஆண்டு தந்தை இறந்துபோக தந்தை இறந்த துக்கத்திலிருந்து அவரது தாயால் மீண்டும் வரவே முடியாததை கவனித்தார். இதிலிருந்து அவரை வெளி கொண்டுவர என்ன செய்வதென்று யோசித்தார். பின்பு தனது தாயிடம் அவருக்கு ஏதேனும் விருப்பங்கள் உள்ளதா? என்று கேட்டார். அவரின் தாய் கூறிய பதில்தான் அவரது வாழ்க்கை பாதையே மாற்றியது.
கோயில்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சூழ்நிலை மற்றும் நிதி பற்றாக்குறையால் தன்னால் அப்பொழுது அதை செய்ய முடியாத நிலையில், இப்போது கோயில்களுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். தாயின் விருப்பத்திற்காக தன் வேலையை துறந்தார் கிருஷ்ணகுமார்.
இதையும் படிங்க : திருச்சி மாவட்ட மக்களே... நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? செக் பண்ணிக்கோங்க
இதனைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களை தந்தையில் ஸ்கூட்டரிலேயே சென்று தரிசிக்க தொடங்கினர் தாயும், மகனும்.
இதற்கு மாத்ரு சேவா சங்கல்ப புனித யாத்திரை என்ற பெயரிட்டு கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உட்பட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு சென்று முக்கிய புனிதத் தலங்களை தரிசித்துவிட்டு, நேற்று திருச்சி வந்தனர்.
ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில்களில் தரிசனம் செய்தனர். இவ்வகையில் இதுவரை ஆயிரத்து 586 கிலோமீட்டர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், வெளிநாடுகளிலும் உள்ள புனித தலங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பெற்றோர்களை முதியோர் விடுதிக்கு அனுப்பும் பிள்ளைகள் மத்தியில் தாய் விருப்பத்திற்காக நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு கோயில்களுக்கு ஏறி இறங்கும் அன்பு மகனை பார்க்கும்போது சற்றே நெகிழ்ந்து தான் போகிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy