முகப்பு /திருச்சி /

10 ரூபாய் நாணயம் கொடுக்கல், வாங்கலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? திருச்சி மக்களின் கருத்து..

10 ரூபாய் நாணயம் கொடுக்கல், வாங்கலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? திருச்சி மக்களின் கருத்து..

X
10

10 ரூபாய் நாணயம்

Ten Rupees Coin : 10 ரூபாய் நாணயம் கொடுக்கல் வாங்கலில் என்ன பிரச்சனை குறித்த திருச்சி மக்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

10 ரூபாய் நாணயங்களை அரசுப் பேருந்துகளிலோ, கடைகளிலோ வாங்க மாட்டோம் என்று சொன்னால், அவர்களுக்கு எதிராக புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து வருகிறது. 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் என்ன பிரச்சனை என்பது குறித்து இதில் காணலாம்.

இதுகுறித்து திருச்சி மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய கருத்துகள், “ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு 10 ரூபாய் நாணயத்தை மாற்ற முடியவில்லை. என் கடையிலேயே 10 ரூபாய் நாணயம் வாங்கிவிட்டேன் எனில், அதைத் திரும்ப என்னால் வேறு வாடிக்கையாளரிடமோ, வேறு கடையிலோ மாற்ற முடியாது. இதற்கென நான் நேரம் செலவழித்து வங்கிக்குச் செல்ல வேண்டும்.

வங்கியிலும் வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான் நான் அதை என் வங்கிக் கணக்கில் செலுத்த முடியும். இது மிகவும் கடினமான வேலை. ஆனால், பணமாக இருந்தால், அது எனக்கு பிரச்னையாக இருக்காது. எளிதில் நான் அதை மாற்றிவிடுவேன்” என்று கூறுகின்றனர். மேலும் இதற்கு அரசு தக்க தீர்வு அளிக்க வேண்டும் என திருச்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy