திருச்சி மாவட்டம் திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் ஆலயத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
சப்தரிஷிகள்
இலங்கையில் இருந்து ராவணன் கயிலாயம் நோக்கி கிளம்பி வந்தார். வழியில் இப்பகுதி வனாந்திரமாக இருப்பதை கண்டு, இங்கேயே தங்கி விட்டார். இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள் 10 தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருதமரத்தில் ஐக்கியமாகிவிடுகிவிட்டதாகவும், அந்த மரமே இந்த கோவிலின் தலவிருட்சமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
வழிபட மறுத்த ராவணன்
இந்நிலையல், ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை நான் வழிபட மாட்டேன் என்று எண்ணிய ராவணன், உடனடியாக புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான் என்றும், தனக்கு சிவபெருமான் நேரில் தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்துத் தொடர்ந்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஊட்டியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்ஸ் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
தரிசனம் தரமறுத்த சிவன்
ஆனால், சிவபெருமானோ, தரிசனம் தரவில்லையாம். ஒரு கட்டத்தில் தனது பத்துத் தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி 9 தலைகளையும் திருகி வீசியபோது, ஒரு தலை மட்டுமே மிஞ்சியதாம், இதனைப் பார்த்து மனம் மகிழ்ந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு காட்சியளித்தார். அதோடு ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும் சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்டவைத்து, மீண்டும் அவனைப் பத்துத் தலை ராவணனாக உருவாக்கினர் என்றும் சொல்லப்படுகிறது.
ராவணன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த ராவணனுக்கு கடுந் தவத்துக்குப் பிறகு சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தது இத்திருக் கோயிலில்தான் என்று நம்பப்படுகிறது.
ஊர் பெயர் காரணம்
ராவணன் தனது தலைகளைத் திருகி யாகத்தில் வீசியதால், முற்காலத்தில், திருகுதலையூர் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி திருத்தலையூர் என்றானது என்றும் சொல்லப்படுகிறது. இதையொட்டி கோவிலின் உள்பிரகார மண்டபத்தில் தனி சன்னதி கொண்டு ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் அமைந்துள்ளது என்றும், பத்துத் தலை ராவணன் உருவாக்கிய சிவலிங்கம் என்பதால், சற்று பெரிதாகவே இருக்கிறது. ராவணன் வழிபட்ட சிவலிங்கம் கொண்ட கோபுரத்தின் மேல்பகுதியில் பத்துத் தலைகளைக் கொண்டு ராவணன் எழுந்தருளியிருப்பது போன்று சிற்பங்களும் காணப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோயிலின் சிறப்புகள்
சப்தரிஷீசுவரர் - மூலவர் குங்குமாம்பிகை அம்மன், உருத்திர பசுபதி நாயனார் - அகோர வீரபத்திரர், விநாயகர் வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணியர் 3 விரல்களை மடக்கியபடி எழுந்தருளியுள்ள திருமால் சண்டிகேசுவரர் துர்க்கையம்மன்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் நேர் எதிரிலேயே தீர்த்தக்குளம் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பதும் இந்த கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாக திகழ்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy