தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒரு கிராமத்தில் உள்ள நோயாளி அதிக தூரம் பயணம் செய்து மருத்துவ வசதிகளை பெற வேண்டும் என்ற நிலையில் அதை மாற்றும் நோக்கத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கொண்ட மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற வகையில் அமைக்கப்பட வேண்டும். அதன்படி அமைக்கப்படும் இந்த சுகாதார நிலையங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.
இது தவிர குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்குதல், இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்வது ஆகியவையும் இதன் செயல்பாடுகள்.தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 15, கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 49, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 18, என திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 84 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த சுகாதார நிலையங்களின் மருத்துவ சேவை திருப்தி அளிப்பதால் தலைமை மருத்துவமனையை மக்கள் நாடி செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறு சிறு அறுவை சிகிச்சைகளை கூட செய்யும் அளவிற்கு தற்போது அதன் தரம் உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களுடைய பெயரை பதிவு செய்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
ஆனால் பிரசவ காலத்திற்கு தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தனர். அதற்கு காரணம் போதிய வசதியின்மை மருத்துவ உபகரணங்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் இருந்தது.
தற்போது அந்த நிலை மாறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வசதிகளும் மருத்துவர்கள் செவிலியர்கள் என போதுமான எண்ணிக்கையில் அனைவரும் பணியாற்றி வருகின்றனர். இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் தனியார் மருத்துவமனையோ அல்லது தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்வது குறைந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆரம்ப சுகாதார நிலையங்களே மிகச்சிறந்த முறையில் பிரசவங்களை கையாளுகின்றன. இறப்பு விகிதங்களை ஏதும் இல்லாத அளவில் திருச்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களின் தாரம் உயர்ந்ததற்கு, பொதுமக்கள் சுகாதாரத் துறையையும் அரசையும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy