முகப்பு /திருச்சி /

“மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க தலைமீது கூரை கூட இல்லை” - புலம்பும் மணச்சநல்லூர் நரிக்குறவ சமூக மக்கள்...

“மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க தலைமீது கூரை கூட இல்லை” - புலம்பும் மணச்சநல்லூர் நரிக்குறவ சமூக மக்கள்...

X
ஊசி

ஊசி பின்னும் நரிக்குறவர்.

Trichy News | எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் படித்து முடித்துவிட்டு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்து வருவதாக சோகத்துடன் கூறுகின்றனர் மணச்சநல்லூர் நரிக்குறவர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மழைக்கு ஒதுங்க தலை மீது ஒரு கூரை இல்லை,பிள்ளைகள் படித்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை, எங்களுக்கு விடியல் எப்போது கிடைக்கும் என புலம்புகின்றனர் மணச்சநல்லூரில் வசிக்கும் நரிக்குறவர்கள்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட் பகுதி அருகே 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் நிலைமையை அறிந்து கொள்ள நேரில் சென்ற போது மிகவும் ஒரு மோசமான நிலை தான் அங்கு இருந்தது. தெருவுக்குள் சென்றோம் அங்கும் இங்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை கண்டோம்.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, கடந்த ஐந்து தலைமுறைகளாக இந்த பகுதியில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். உத்தமர் கோவில் நிலத்தில் தான் நாங்கள் இருந்து வருகிறோம் எங்களுக்கென்று இதுவரை எந்த ஒரு பட்டாவும் வழங்கவில்லை. இருக்கக்கூடிய வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் எங்களுடைய வீடு அடிக்கடி இடிந்து விழுந்து விடும் என்பதால் பெண்கள் குழந்தைகளை அருகில் உள்ள கோயில்கள் கடைவீதிகள் பேருந்து நிலையங்களில் சென்று இரவு முழுக்க மழை முடியும் வரை காத்திருந்து மழை நின்ற பிறகு மீண்டும் வீட்டிற்கு வருவோம்  என்றும் இது கடந்த ஐந்து தலைமுறையாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையாக தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாங்கள் நரிக்குறவர் மக்கள்தான் தினந்தோறும் பேருந்து நிலையம் கோயில் குளங்கள் சுற்றுலா தளங்கள் என காலை முதல் மாலை வரை அலைந்து ஊசிமணி,பாசிமணி,பலூன் விற்றால்தான் எங்களுக்கு காசு விற்பனை ஆனாலும் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகும் அதைக் கொண்டுதான் குழந்தைகளுக்கு உணவு சமைப்பது மற்ற இதர செலவுகளை பார்த்து வருகிறோம் .ஆகையால் எங்களுக்கு அரசாங்கம் ஒரு நல்ல வழியை காண்பிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் படித்து முடித்துவிட்டு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்து வருகிறது. வேறு வழி இல்லாமல் படிப்பை தொடர முடியாத காரணத்தால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் எங்களுடன் வந்து வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக நரிக்குறவர்கள் வேதனையாக கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Trichy